இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2012-01-17

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.
(ii) 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க தேசிய பொது வழிகள் சட்டத்தின், 89 ஆம் பிரிவின் (2)ஆம் பந்தியின் (இ) என்னும் உட்பந்தியின் கீழான ஒழுங்குவிதிகள் (2011.11.18ஆந் திகதிய 1732/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் (2012.01.02ஆந் திகதிய 1739/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழான உயர்கல்வி அமைச்சரின் கட்டளை (2011.07.20ஆந் திகதிய 1715/13ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழான உயர்கல்வி அமைச்சரின் கட்டளை (2011.08.03ஆந் திகதிய 1717/15ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (ஆ) பந்தியின் கீழான உயர்கல்வி அமைச்சரின் கட்டளை (2011.11.08ஆந் திகதிய 1731/3ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vii) 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2009 ஆம் ஆண்டிற்கான பனை அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை.
(ix) 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கைகள்.

கெளரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு "இலங்கை பட்டயக் கப்பற் தரகர்கள் நிறுவக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா அவர்களுக்கு "சந்திம வீரக்கொடி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1625 மணியளவில் பாராளுமன்றமானது 2012 ஜனவரி 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom