சபை அலுவல்கள் |
திகதி : | 2011-10-18 |
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ டென்சில் பெர்னான்டோ
(ii) மறைந்த கௌரவ எச்.ஜீ.பி. நெல்சன்
(iii) மறைந்த கௌரவ மேர்வின் ஜே. குறே
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-
1. ஒதுக்கீடு (2012)
(2012 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும், அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும், திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலம்)
2. பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்தொகுதி கல்லூரி (திருத்தம்)
(2008ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்தொகுதி கல்லூரி சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களுக்கு "மினுவாங்கொட சிங்க மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கரையோரம் பேணல் (திருத்தம்) சட்டமூலம்
திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1825 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஒக்டோபர் 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்