இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-08-26

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

• மறைந்த கௌரவ எல். த எஸ்.ஏ. குணசேகர
• மறைந்த கௌரவ (திருமதி) சோமகுமாரி தென்னக்கோன்
• மறைந்த கௌரவ விமலசிறி த மெல்


• மறைந்த கௌரவ ஆர்.எம். தர்மதாச பண்டா - எதிர்வரும் தினமொன்றில் முடிவுறுத்தப்படவுள்ளது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கரையோரம் பேணல் (திருத்தம்)

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க, கரையோரம் பேணல் சட்டத்தைத் திருத்துவதற்கும்; 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கைக் காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனச் சட்டத்தினதும் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தினதும் குறித்த சில ஏற்பாடுகளைத் திருத்துவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானுமானவர் பிரேரித்தார்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இளைஞர்களுக்கான கொரியா தொழில் செயற்றிட்டம் சம்பந்தமான விபரங்கள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom