இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-08-24

சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தம்)

(143ஆம் அத்தியாயமான) குடிசனமதிப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் சார்பாக கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.


பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2011 நவெம்பர் மாதம் 30ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
• தேயிலை சிறு பற்றுநில அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வர்த்தக வலய ஊழியர்களை கைது செய்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1914 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஆகஸ்ட் 25 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom