இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-06-07

கெளரவ சாந்த பண்டார அவர்களுக்கு "சுவாபிமானி தஹம் சவிய (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) சுங்கவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(v) கொடுப்பனவு உபாயங்களின் மோசடிகள் சட்டத்தின் கீழ் கட்டளைகளும் ஒழுங்குவிதிகளும்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 08 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom