2021 ஜனவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2021-01-06 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii) 2019 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2019 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2018 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசில் பிரேமஜயந்த - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ துமிந்த திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ இந்திக அனுருத்த ஹேரத் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ டி.வீ. சானக - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ விஜித ஹேரத் - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர - ஐந்து மனுக்கள்
(vii) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
(iii) கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி
(iv) கௌரவ நலின் பிரனாந்து
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
கோவிட்-19 மற்றும் நாட்டின் பொருளாதாரக் கொள்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(ii) சான்று (திருத்தச்) சட்டமூலம்
(iii) பிணை (திருத்தச்) சட்டமூலம்
(iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சுற்றுலாத் துறையினை புத்துயிராக்கல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிரோஷன் பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1806 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 07ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






