2019 செப்டெம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-09-05 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களுக்குப் பதிலாக கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ கருணாரத்ன பரணவிதான அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்குப் பதிலாக கௌரவ எட்வட் குணசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ கருணாரத்ன பரணவிதான
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்தில் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சி
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விவசாயிகள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ செஹான் சேமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1703 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






