இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 செப்டெம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-09-03

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘C’ :  வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை

(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை அறிக்கை  தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 07 ஆம் திகதிய 2122/4 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 21 ஆம் திகதிய 2124/2 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 21 ஆம் திகதிய 2124/4 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூலை 03 ஆம் திகதிய 2130/20 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூலை 10 ஆம் திகதிய 2131/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் பதில் நிதி  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூலை 18 ஆம் திகதிய 2132/13 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதி தீர்வை வரி தொடர்பான  தீர்மானம்
(2019 யூன் 11 ஆம் திகதி 2127/13 ஆம் இலக்க விசேட வர்த்தமானிப் பத்திரிகை)
(xv)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான)  19(அ) பிரிவின் கீழ் இறக்குமதி அரசிறை விலக்களிப்புகள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூலை 31 ஆம் திகதிய 2134/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின்  2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை அறிக்கை  தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர்  கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி லொக்குகே                   
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே             -       இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி       -       மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)   
•    திரைப்படங்கள் விநியோகத்திலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2019.07.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க
•    வவுனியாவில் வீட்டுத் திட்டமொன்றை முடிவுறுத்தல் தொடர்பாக 2019.07.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா
•    முல்லைதீவு, கண்ணியா மற்றும் இதர பிரதேசங்களிலுள்ள தொல்பொருளியல் இடங்கள் தொடர்பாக 2019.07.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா

ஆகியோரினால் எழுப்பிய வினாக்களிற்கு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் பதிலளித்தார்.

(ii)    சர்வதேச விமானங்களுக்கான தரை இயக்க சேவைக் கட்டணங்களை குறைத்தல் தொடர்பாக 2019.08.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1639 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom