இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஆகஸ்ட் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-08-20

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “மரண தண்டனையை இல்லாதொழித்தல்”
‘B’ :  “விடுமுறை நாட்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலங்கள் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
(ii)    2015 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை

(iv)    2018 ஆம் ஆண்டுக்கான சட்டவரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(v)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.06.01 முதல் 2019.07.15 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(vi)    இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் தரம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை
(vii)    (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் 105 ஆம் பிரிவின் கீழ், தொழிற்சாலைகளைப் பதிவு செய்தலும் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களை அங்கீகரித்தலும் தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii)    (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 34 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் 105 ஆம் பிரிவின் கீழ், நீராவிக் கொதிகலன்களைப் பதிவு செய்தல் தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix)    (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 34, 35, 36, 36அ, 38 மற்றும் 38அ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் 105 ஆம் பிரிவின் கீழ், நீராவிக் கொதிகலன்கள் மற்றும் வேறு அழுத்தக் கலன்களை பரிசோதனை செய்வதற்கான சான்றிதல்களை வழங்குதல் தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x)    (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 58அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் 105 ஆம் பிரிவின் கீழ், மிகையான இரைச்சலிலிருந்து வேலையாளர்களைப் பாதுகாத்தல் தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi)    (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 13 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கூறப்பட்ட கட்டளைச்சட்டத்தின் 105 ஆம் பிரிவின் கீழ், பொது வெளிச்சமிடுதல் நியமம் தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர்  கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களுக்குப் பதிலாக கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே                       -          மூன்று மனுக்கள்       
(iii)    கௌரவ ஜயந்த சமரவீர                             -          மூன்று மனுக்கள்      
(iv)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மீனவர்களுக்கான பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் தொடர்பாக 2019.08.01 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்-

(i)    சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii)    நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் 2ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-

(i)    புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் சில பகுதிகளில் நிலவுகின்ற வறட்சி” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 21ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom