2019 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-08-08 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அறையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபரப்புத் தரமான கெமரா அமைப்பு முறைமையை கையளித்தல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(ii) 2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் நிதி அமைச்சின், பொது தொழில்முயற்சிகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷண ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
சர்வதேச விமானங்களுக்கான தரை இயக்க சேவைக் கட்டணங்களை குறைத்தல்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“மதுவரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1614 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






