2019 ஆகஸ்ட் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-08-07 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ சாந்த பண்டார, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2013 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXX ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் ;
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் IX, X மற்றும் XI பகுதிகளையும்; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் IV, V மற்றும் VI ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(ii) 2016/2017 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டு அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லக்கி ஜயவர்தன
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(ii) கௌரவ சீ.பீ. ரத்நாயக்க
(iii) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iv) கௌரவ அநுர திசாநாயக்க
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வைத்தியர்களை இடமாற்றம் செய்தல்
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் பதிலளித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மட்டக்களப்பு கெம்பஸ் பிரைவட் லிமிடட் பற்றிய அவதானிப்புகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 8ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






