இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஆகஸ்ட் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-08-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ. அவர்களின் மரணம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையுடன் கணக்கறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(v)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர் கல்விக்கான தேசிய நிலையத்தின் ஆண்டறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(viii)    2017 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணணிக் கல்விக் கூடத்தின் ஆண்டறிக்கை
(x)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xi)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(xii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 52(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் தீர்ப்பாளர்களை பதிவுசெய்தல் தொடர்பில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 08 ஆம் திகதிய 2113/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.  
(xiii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 53(2) மற்றும் 54(1)(அ) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் மேன்முறையீட்டு நடவடிக்கைமுறை தொடர்பில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 28 ஆம் திகதிய 2116/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.    
(xiv)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 55(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் தகவற் செயலகம் தொடர்பில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 28 ஆம் திகதிய 2116/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அசோக் அபேசிங்க
(ii)    கௌரவ அஜித் மான்னப்பெரும
(iii)    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
(iv)    கௌரவ நிமல் லான்சா
(v)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ      -      ஆறு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஒருங்கிணைந்த கொடுப்பனவு

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி நடமாடும் சேவையின் (“நில மெஹவர”) கீழ் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்

 

மேற்சொன்ன வினாவிற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் பதிலளித்தார்.


அதனையடுத்து, 1430 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 7ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom