2019 ஜூலை 26ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-26 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “அரச காணி (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII, XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும், நான்காம் தொகுதியின் V ஆம் பகுதியையும், ஐந்தாம் தொகுதியின் IX ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் I, II, III, IV, V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், பத்தாவது தொகுதியின் VIII, IX, XI மற்றும் XII ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஆண்டறிக்கையும் கணக்குக் கூற்றும்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(v) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் செஸ் வரி தொடர்பில் ஆக்கப்பட்டு, 2019 ஏப்றல் 04 ஆம் திகதிய 2117/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜே.சீ. அலவத்துவல - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ கே.கே. பியதாஸ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் அட்டைகள் பிடித்தல் தொடர்பாக 2019.07.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாக்களிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.
(ii) பிரித்தானியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள குப்பை தொடர்பாக 2019.07.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாக்களிற்கு நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ரொசான் ரணசிங்க
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல் மற்றும் தனது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையை அழிக்க முயற்சித்தல்
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1725 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 31ஆம் திகதி புதன்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






