2019 ஜூலை 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-07-25 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேர்மினல்ஸ் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் செயற் சாதனை அறிக்கை
(vii) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 26 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 22 ஆம் பிரிவின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர் வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 14 ஆம் திகதிய 2123/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது களனிப் பல்கலைக்கழகத்தின் மானிடவியற் பீடத்தில் சமஸ்கிருதம் மற்றும் கிழக்குக் கற்கைகள் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மே 01 ஆம் திகதிய 2069/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2018 ஆகஸ்ட் 09 ஆம் திகதியிலிருந்து தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்தல் தொடர்பில் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ருவரி 18 ஆம் திகதிய 2111/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமை மற்றும் வர்த்தக பீடத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 03 ஆம் திகதிய 2126/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைக்கான பல்கலைக்கழகத்தை தாபிக்கும் கட்டளைக்கான அட்டவணையில் காணப்படும் இசைப் பீடத்தில் ஆங்கில மொழிக் கற்பித்தற் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் நகரத் திட்டமில், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 03 ஆம் திகதிய 2126/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மனுஷ நாணாயக்கார
(ii) கௌரவ ஜயந்த சமரவீர
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுடனான ஐ.நா.வின் அறிக்கையாளரின் சந்திப்பு தொடர்பான கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ திலக் மாரபன அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
தன்னைப் பற்றிய தவறான செய்தி
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






