2019 ஜனவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-01-08 |
|
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ குடா விதானலாகே சாந்த பண்டார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் இராஜினாமா
‘B’ : எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பானது
‘C’ : தவிசாளர் குழாமில் சேவையாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் ─
• 2018 ஆம் ஆண்டின் முதலாம் (2018.01.01 -2018.03.31) காலாண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
• 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் (2018.04.01 - 2018.06.30) காலாண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான வர்த்தக திணைக்களத்தின் வருடாந்த கணக்குகள் மற்றும் செயல்நிறைவேற்றுகை அறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
சுயாதீன தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களின் சஞ்சலம் காரணமாக எழுந்துள்ள நிலைமை
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) தெரிவுக் குழு
114 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் தெரிவுக் குழுவானது நடப்பு அமர்வின் போது சேவையாற்றுவதற்காக சபாநாயகரைத் தவிசாளராகவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய வகையில் பாராளுமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்படும் பதினேழு (17) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) தெரிவுக்குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் மற்றும் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்துவ உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பின்வரும் ஐந்து (05) உறுப்பினர்களும் தற்போதைய கூட்டத்தொடரின் சேவைக்காக தெரிவுக்குழுவில் சேவையாற்றுவார்களாக:-
கௌரவ ஜோன் அமரதுங்க
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா
கௌரவ சஜித் பிரேமதாஸ
கௌரவ (திருமதி) தலதா அதுகோரல
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(iii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்றத்தின் 115 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பதின்மூன்று (13) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(iv) அரசாங்க நிதி பற்றிய குழு
121 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் பதின்மூன்று (13) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 09 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.