2018 ஜூன் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-06-19 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பிணைமுறி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்
‘B’ : “காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘C’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VIII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையும் கணக்குகளும்
(v) 2017 ஆம் ஆண்டுக்கான உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சாதனைகள் அறிக்கை
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் ஆண்டறிக்கை
(x) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை
(xiii) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.04.01 முதல் 2018.05.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xiv) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 15 ஆம் திகதிய 2058/33 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 15 ஆம் திகதிய 2058/34 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னோலொஜி (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 11 ஆம் திகதிய 2053/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் கலம்போ இன்டர்நஷனல் நோட்டிக்கல் அன்ட் என்ஜினியரிங் கொலெஜ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 11 ஆம் திகதிய 2053/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் சிறீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 24 ஆம் திகதிய 2055/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ ஆம் பிரிவின் கீழ் கலம்போ இன்டர்நஷனல் நோட்டிக்கல் அன்ட் என்ஜினியரிங் கொலெஜ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2067/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் சிறீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2067/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனத்தைப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2067/17ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லசந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்
(ii) கௌரவ சுஜீவ சேனசிங்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகள்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






