2018 மே 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-05-24 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ முஹமட் நவவி, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
‘B’ : கௌரவ சபாநாயகருடனான விசேட கூட்டம்
‘C’ : பின்வரும் குழுக்களில் பணியாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்-
(i) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
(ii) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
(iv) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
(v) அரசாங்க நிதி பற்றிய குழு
(vi) பொது மனுக்கள் பற்றிய குழு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும்; மற்றும்
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIV, XV, XVI, XVII மற்றும் XVIII ஆம் பகுதிகளையும், ஆறாவது தொகுதியின் VI, VII, X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும், பத்தாவது தொகுதியின் VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கைகளும் கணக்குகளும்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முப்பத்தி ஏழாவது வருடாந்த அறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை றுஹுணு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2015 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2015 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்விக் கல்லூரியின் ஆண்டறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முகமாலை பகுதியில் மீள்குடியமர்வு தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தென் மாகாணத்தில் பரவிவரும் காய்ச்சல்கள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1515 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






