இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன. தலைப்பு 122 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு 207 குழுவினால் 39 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 44; எதிராக 05).
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 122 286 287 288 322 327 |
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் இலங்கை நில அளவையாளர் நாயகம் திணைக்களம் தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
| 101 201 202 203 204 205 206 207 208 209 |
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பெளத்த அலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கலாசார அலுவல்கள் திணைக்களம் தொல்பொருளியல் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம் |
தலைப்பு 207 குழுவினால் 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 76; எதிராக 08).