இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

2025-09-23
1
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக நாளை (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-23 மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...
2025-09-22 தேசிய கணக்காய்வு (திருத்த)...
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
மேலும்

2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-24
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-24 2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை...
2025-09-23 2025 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை...
2025-09-12 2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை...
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

அரசாங்கச் சட்டமூலங்கள் தொடர்பான செயற்பாடுகள்

முதலாம் மதிப்பீடு
1

அரசியலமைப்பின் உறுப்புரை 78 இன் பிரகாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசாங்கச் சட்டமூலமொன்று அரசியலமைப்பின் உறுப்புரை 77 இன் பிரகாரம் சட்டத்துறைத் தலைமை அதிபதியின் அவதானிப்புகளுடனும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெற்றதும் அதனை நிலையியற் கட்டளை 45 இன் பிரகாரம் முதலாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு சட்டமூல அலுவலகம் அதனைச் சபை ஆவண அலுவலகத்துக்கு அநுப்பி வைக்கும்.

2

முதலாம் மதிப்பீட்டின் பின் சட்டமூலம் அச்சிடப் பணிக்கப்பட்டதும் சட்டமூல அலுவலகம் அச்சட்டமூலத்துக்கு இலக்கமொன்றை இட்டு, மும்மொழிகளிலும் ஒப்பிட்டு, அச்சிடச் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விநியோகிப்பதற்கும் அரசியலமைப்பின் சொல்லப்பட்ட உறுப்புரை 78 மற்றும் நிலையியல் கட்டளை 45 ஆகியவற்றின் பிரகாரம் ஏழு நாட்களின் பின்னர் இரண்டாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்தில் இடுவதற்கும் ஆவன செய்யும்.

3

அரசியலமைப்பின் உறுப்புரை 121 இன் பிரகாரம் சட்டமூலமொன்றுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படுமிடத்து பாராளுமன்றத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததன் பின்னர் அல்லது மூன்று வாரங்களின் பின்னர் மட்டுமே அத்தகைய சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக நிருணயிக்கப்படும். நிலையியல் கட்டளை 50 இன் பிரகாரம் மனு கிடைக்கப்பெற்றமை மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆகிய இரண்டையும் பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்குச் சட்டமூல அலுவலகம் வழிவகுக்கும்.

4

அரசியலமைப்பின் உறுப்புரை 122 இன் பிரகாரம் தேசிய நலனுக்கு அவசரமானதென அமைச்சரவை சான்றுபடுத்திய சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்குமிடத்து, நிலையியல் கட்டளை 45 மற்றும் 46 என்பவற்றின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, மும்மொழிகளிலும் ஒப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் சட்டமூல அலுவலகம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக அச்சட்டமூலத்தை ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறச் செய்யும். உயர் நீதிமன்றத் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கும் சட்டமூல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

5

அரசியலமைப்பின் 154 (எ). 5(அ) உறுப்புரையின் ஒன்பதாவது அட்டவணையான, ஒருங்கியை நிரலிலுள்ள சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்கும்போது, சட்டமூல அலுவலகம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் அறிவிக்கச் செய்வதுடன் முதலாம் மதிப்பீட்டுக்காக ஒழுங்குப்பத்திரத்திலும் இடம்பெறச் செய்யும். முதலாம் மதிப்பீட்டின் பின்னர் அச்சட்டமூலம் மும்மொழிகளிலும் ஒப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டு நிலையியற் கட்டளை 46அ. (2) இன் பிரகாரம் சட்டமூலம் பற்றிய மாகாண சபைகளின் கருத்துக்களை அறிவதற்காக அவற்றுக்கு அநுப்பப்படுகின்றது. மாகாண சபைகளின் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர், அது பற்றிப் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அறிவித்தலைச் சட்டமூல அலுவலகம் தயார் செய்வதுடன் நிலையியற் கட்டளை 46அ. (2)(ஆ) இன் பிரகாரம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக அச்சட்டமூலம் ஒழுங்குப்பத்திரத்திலும் இடம்பெறச் செய்கின்றது.

6

அரசியலமைப்பின் உறுப்புரை 154எ. (5)(ஆ) இன் ஒன்பதாவது அட்டவணையான ஒருங்கியை நிரலில் உள்ள ஏதேனும் உத்தேச நியதிச்சட்டமொன்று பாராளுமன்றத்துக்குக் கிடைக்கும்போது, சட்டமூல அலுவலகம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் அறிவிக்கச் செய்து நிலையியற் கட்டளை 46 அ. (3)(அ) இன் பிரகாரம் அச்சட்டமூலம் நிலையியற் குழுவுக்கு அநுப்பப்படும்போது அதனைக் கையாள்கிறது. (நிலையியற் குழுவின் நடவடிக்கை முறை பற்றி மேலும் விபரங்களுக்கு 3 ஆம் பந்தியைப் பார்க்கவும்.) அந்நியதிச் சட்டத்தை நிலையியற் குழு பரிசீலித்ததன் பின்னர், சட்டமூல அலுவலகம் அறிக்கையொன்றைத் தயாரித்து மும்மொழிகளிலும் ஒப்பிடுவதுடன் அதனை அச்சிடச் செய்து பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிப்பதுடன் நிலையியற் கட்டளை 46அ. (3)(ஆ) இன் பிரகாரம் சம்பந்தப்பட்ட மாகாண சபைக்கும் அநுப்பி வைக்கும்.

7

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பொறுத்த வரை, வரவுசெலவுத் திட்ட உரையை உடனடுத்துப் பாராளுமன்றத்தினால் நிருணயிக்கப்படும் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய எல்லாத் திருத்தங்களையும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டிய அறிவித்தலொன்றைச் சட்டமூல அலுவலகம் தயார் செய்யும்.

 

 

இரண்டாம் மதிப்பீடு
8 மேலே 1.1 முதல் 1.7 வரையான பந்திகளில் குறிப்பிடப்பட்டவாறு முதலாம் மதிப்பீடு முடிவடைந்ததும் அச்சட்டமூலங்கள் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டு நிலையியற் கட்டளை 52 இன் பிரகாரம் முழுப் பாராளுமன்றக் குழுவுக்கு அல்லது தெரிகுழுவொன்றுக்கு அல்லது நிலையியற் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்படும். சட்டமூலமொன்று தெரிகுழுவொன்றுக்கு அல்லது நிலையியற் குழுவொன்றுக்கு ஆற்றுப்படுத்தப்படும்போது, நிலையியற் கட்டளை 63, 64 மற்றும் 65 என்பவற்றின் பிரகாரம் குழு பாராளுமன்ற சபாபீடத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்ததன் பின்னர் மட்டுமே சட்டமூலம் பரிசீலிக்கப்படும். சட்டமூலங்கள் ஆற்றுப்படுத்தப்படும் தெரிகுழுக்களை அல்லது நிலையியற் குழுக்களைப் பாராளுமன்றச் சட்டமூலக்குழு கையாளும். (இக்குழுக்களின் நடவடிக்கை முறை பற்றிய மேலும் விபரங்களுக்கு 3 ஆம் பந்தியைப் பார்க்கவும்.)

 

2013-06-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom