இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில்

2025-09-23
1
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக நாளை (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2025.09.21ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2454/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-23 மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...
2025-09-22 தேசிய கணக்காய்வு (திருத்த)...
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
மேலும்

2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-24
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-24 2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை...
2025-09-23 2025 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை...
2025-09-12 2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை...
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

அரசாங்கச் சட்டமூலங்கள்


அரசாங்கச் சட்டமூலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

  • சாதாரண சட்டமூலங்கள்
  • அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலங்கள் - அரசியலமைப்பின் 82, 83 மற்றும் 84 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான, நீக்குவதற்கான மற்றும் மாற்றீடு செய்வதற்கான சட்டமூலங்கள்.
  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

 

பாராளுமன்ற நடைமுறை

முதலாம் மதிப்பீடு

அரசியலமைப்பின் 78ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குப் பின்னர் நிலையியற் கட்டளை இல.50 இன் ஏற்பாடுகளுக்கமைய, ஓர் அமைச்சரவை அமைச்சர் அல்லது ஒரு பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படும்.

ஆயினும், மாகாண சபை நிரலிலுள்ள விடயத்துடன் தொடர்புபட்ட சட்டமூலமாயின், அச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரும், பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்கு முன்னரும் சனாதிபதியால் மாகாண சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.

முதலாம் மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை பாராளுமன்றத்தினால் விடுக்கப்படும்.

 

இரண்டாம் மதிப்பீடு

50 மற்றும் 55(1) ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கமைய முதலாம் மதிப்பீட்டிலிருந்து ஏழு நாட்கள் கடந்த பின்னர் இரண்டாம் மதிப்பீட்டிற்காக சட்டமூலம் ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படுகிறது. இரண்டாம் மதிப்பீட்டுத் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் மதிப்பீட்டானது முதலாம் மதிப்பீட்டு திகதியிலிருந்து ஏழு நாட்களின் பின்னர் இடம்பெறமாட்டாது:-

(அ) அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் கீழ் உயர்நீதிமன்றத்தில் சட்டமூலத்திற்கெதிராக மனுத்தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், நிலையியற் கட்டளை இல. 55(2)இன் ஏற்பாடுகளுக்கமைய நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அவ்வாறான சட்டமூலமானது இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
(ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 154 எ (5) அ இன் கீழ் அரசியலமைப்புக்கான (ஒருங்கியை நிரல்) ஒன்பதாம் அட்டவணையின் III ஆம் நிரலில் உள்ள விடயங்களுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அத்தகைய சட்டமூலங்கள் நிலையியற் கட்டளை இல. 51(2)(அ) இன் பிரகாரம் சகல மாகாண சபைகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவைகளுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றன. அவற்றின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னரே நிலையியற் கட்டளை இல. 51(2)(ஆ) இன் பிரகாரம் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறும்.


சட்டமூலமொன்றின் இரண்டாம் மதிப்பீட்டின்போது நிலையியற் கட்டளை இல. 56இன் பிரகாரம், சட்டமூலம் தொடர்பாக விவாதமொன்று இடம்பெறும். விவாதத்தின் இறுதியில் சட்டமூலம் வாக்கெடுப்புபொன்றினால் நிறைவேற்றப்படும். (குரல் வாக்கு/ வரி/ பெயர்) சட்டமூலமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டால் அச்சட்டமூலம் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தவிர்ந்த ஏனைய) முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு அல்லது குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க தெரிகுழுவொன்றுக்கு அல்லது சட்டவாக்க நிலையியற் குழுவொன்றுக்கு அல்லது பொருத்தமான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நிலையியற் கட்டளை இல. 57 இன் பிரகாரம் ஆற்றுப்படுத்தப்படும்.

 

சட்டமூலத்தின் குழு நிலை

நிலையியற் கட்டளை இல. 57 இன் பிரகாரம் முழுப் பாராளுமன்ற குழுவுக்கு சட்டமூலமொன்று ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்ற பட்சத்தில் நிலையியற் கட்டளை 93 தொடக்கம் 99 வரையான இலக்கங்களின் பிரகாரம் குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குழுநிலையில் சட்டமூலத்தின் அனைத்து வாசகங்களும் குழுவில் கலந்துரையாடப்படுவதோடு புதிய திருத்தங்கள், நிலையியற் கட்டளைகள் இல. 59 முதல் 65 வரையின் பிரகாரம் சட்டமூலத்தின் வாசகங்களுக்கு பிரேரிக்கப்படலாம். சட்டமூலத்திற்கு புதிய வாசகங்களும் புதிய அட்டவணைகளும் பிரேரிக்கப்படும் பட்சத்தில் அவை இரண்டாம் முறையாக மதிப்பிடப்பட்டு அதன் பின்னர் சட்டமூலத்தின் சட்டவாசகமும் சட்டப்பெயரும் நிலையியற் கட்டளை 66இன் பிரகாரம் பிரிசீலிக்கப்படும்.

திருத்தங்களின் தன்மையானது நிலையியற் கட்டளை இல. 43, 44, 45 மற்றும் 46 என்பவற்றில் தரப்பட்டிருக்கின்றது. அனைத்து திருத்தங்களும் எழுத்து மூலமாக அமைந்திருக்க வேண்டுமென்பதோடு, நிலையியற் கட்டளை இல. 43(2)இன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்படுதல் வேண்டும்.

 

நிலையியற் குழுவில் / தெரிகுழுவில் பரிசீலித்தல்

சட்டமூலம் தெரிகுழுவொன்றுக்கு அல்லது சட்டவாக்க நிலையியற் குழுவொன்றுக்கு அல்லது பொருத்தமான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்றபோது நிலையியற் கட்டளை இல. 58 இன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு, குழு அறிக்கை செய்யும் வரை எவ்வித மேலதிக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டது.

குழுவின் அறிக்கை நிலையியற் கட்டளை இல. 68, 69 மற்றும் 70 இன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

சட்டவாக்க நிலையியற் குழுவின் நடவடிக்கைகள் நிலையியற் கட்டளை 113 இன் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றன.

தெரிகுழுவின் நடவடிக்கைகள் நிலையியற் கட்டளை 100 முதல் 110 வரையான இலக்கங்களின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மூன்றாம் மதிப்பீடு

சட்டமூலத்தின் பரிசீலனையை முழுப் பாராளுமன்றக்குழு பூர்த்தி செய்ததன் பின்னர் நிலையியற் கட்டளை இல. 67 இன் பிரகாரம் தவிசாளர் சட்டமூலத்தை திருத்தத்துடன் அல்லது திருத்தமின்றி பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வார்.

சட்டமூலம் நிலையியற் குழு அல்லது தெரிகுழுவொன்றில் பரிசீலனை செய்யப்பட்டால் குழுவின் பாராளுமன்றத்தில் பரிசீலனைசெய்யப்பட்டு அதன் பின்னர் சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு நிலையியற் கட்டளை இல. 71 முதல் 73 வரையின் பிரகாரம் நிறைவேற்றப்படும். மூன்றாம் மதிப்பீட்டிலும் வாக்கெடுப்பொன்று (குரல் வாக்கு/ வரி/ பெயர் மூலமாக) மேற்கொள்ளப்படும்.

சபாநாயகரின் சான்றிதழ்

நிலையியற் கட்டளை இல. 74 இன் பிரகாரம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 79 அல்லது 80 இன் கீழ் சட்டமூலமானது (மூலப்பிரதி) சாபாநாயகரினால் புறக்குறிப்பீடு செய்யப்படுவதன் பேரில் சட்டமூலமொன்று சட்டமாக மாறும்.

 

அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலங்கள்

அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலமொன்றாயின் அச்சட்டமூலத்தின் விரிவுப் பெயரில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அரசியலமைப்புச் சட்டமூலமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதைத் தவிர்ந்த ஏனைய நடைமுறைகள் சாதாரண சட்டமூலங்களின் நடைமுறைகளை ஒத்தவை.

 

2018-04-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom