இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

Internal Affairs Unit

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Phone: 0112777229

WhatsApp No: 0777270145

Fax: 0112777508

 

Key Objectives of the Internal Affairs Unit (IAU)

i.    Prevent corruption in the institution and cultivate a culture of integrity.
ii.    Ensure transparency and accountability in all activities of the institution and ensure public access to information regarding institutional practices and decisions.
iii.    Promote ethical governance within the institution.
iv.    Develop a secure and accessible system to encourage reporting misconduct, protect whistle-blowers and maintain confidentiality.
v.    Support legal enforcement through collaboration with law enforcement agencies and the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC).

 

Composition of Internal Affairs Unit

Serial No. Positions of Internal Affairs Unit Name of the Officer and Designation
01. Head of the Unit Mr. Chaminda Kularathne
Chief of Staff and Deputy Secretary-General of Parliament
02. Integrity Officer Mr. W.K.D.C. Withana
Chief Internal Auditor
03. Members Mr. Kushan Jayaratne
Serjeant-at-arms
04. Mrs. C.I. Dissanayake
Director(Administration)
05. Mrs. C.N. Lokukodikara de Silva
Editor of Hansard
06. Mr. R. H. Edirisinghe
Director (Catering & House-Keeping)
07. Mr. D.L.D. Adikari
Co-ordinating Engineer
08. Mr. G.Sarath Kumara
Director (Finance)
09. Mr. M. Jayalath Perera
Director (Legislative Services) and Acting Director (Communication)
10. Mr. Buddhika Nawagamauwa
Director(Information Systems & Management)

பாராளுமன்ற அறிவகம்

"பாராளுமன்ற அறிவகம்" நிகழ்ச்சித்திட்டத்திற்கான அழைப்பு.....

 

இலங்கைப் பாராளுமன்றம் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் ஒரு நிறுவன கட்டமைப்பாகும். பாராளுமன்ற முறைமைகள் அதன் பாரம்பரியம் மற்றும் பிரசைகளின் பொறுப்புக்கள் தொடர்பில் உங்களுடன் நாம் பலமுறை கலந்துரையாடியுள்ளோம்.
"பாராளுமன்ற அறிவகம்" நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பின்வரும் தலைப்புக்களில் உங்களை நாம் தெளிவுப்படுத்த முயற்சிக்கின்றோம்.

 

  1. சனநாயகம் மற்றும் பாராளுமன்றம்
    1. சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி
    2. மக்கள் இறையாண்மை
    3. இலங்கைப் பாராளுமன்றத்தின் வகிபங்கு
    4. பாராளுமன்ற நடைமுறைகள்

  2. பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள்
  3. குழுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்
  4. சனநாயகம் மற்றும் ஊடக அறிக்கையிடல்
  5. பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம்
  6. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்
  7. பாராளுமன்ற உறுப்பினரின் வகிபங்கு
  8. பாராளுமன்றம் மற்றும் பிரசைகளின் பங்களிப்பு

 

இலங்கைப் பாராளுமன்றத்தில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் உதவியுடன், மேற்கூறிய தலைப்புகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில தலைப்புகளில் உங்களது கிராமம், நிறுவனம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு "பாராளுமன்றத்தின் அறிவகம்" நிகழ்ச்சித்திட்டம் தயாராக உள்ளது.

 

இதுபோன்ற நிகழ்ச்சித்திட்டங்களை உங்களது நிறுவனம்/ அமைப்பு/ குழு ஆகியவற்றுக்கு மேற்கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் படிவத்தை பூர்த்திசெய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது எமது அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்வதன் மூலமோ மேற்கொள்ள முடியும். நீங்கள் எங்களுக்கு அனுப்பும் தகவலின் அடிப்படையில் எமது அதிகாரிகள் நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்படும் திகதி மற்றும் நேரத்தை உங்களுக்கு வழங்குவார்கள்.

 

தகவல் படிவம்

பெயர்:
தேசிய அடையாள அட்டை இலக்கம்:
நிறுவனம் /அமைப்பின் பெயர்:
பங்கேற்கும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை:
நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள்:

 

1தகவல் படிவத்தை சமர்ப்பிக்கவும்

 

தொடர்புகளுக்கு, தொடர்பாடல் திணைக்களம், இலங்கை பாராளுமன்றம்.

 

மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தொலைபேசி இலக்கங்கள்: 0112777318 (பொது சேவைகள் பிரிவு)
                   0715352672
                   0779899085

 

பாராளுமன்றக் கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்தல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் 70 (1) ஆம் பிரிவின் படி பாராளுமன்றக் கூட்டத்தொடரினை இடைநிறுத்தும் அதிகாரத்தினை சனாதிபதி அவர்கள் கொண்டுள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு 33 (அ) இன் பிரகாரம் பாராளுமன்றதின் அமர்வு ஒவ்வொன்றினதும் ஆரம்பத்திலும் பாராளுமன்றதின் அரசாங்கக் கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும்; பாராளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளில் தலைமைதாங்குவதற்கும் அரசியலமைப்பு 33 (ஆ) பிரிவு சனாதிக்கு அதிகாரம் வழங்குகின்றது.

 

ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் அவர்களின் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரானது வைபவரீதியாக 1947 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்று இது பின்னர் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்களிப்பு விடப்படும்.

 

இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்து. இங்கு மகாராணியினது சிம்மாசன உரை இடம்பெற்றதுடன் இவ்வுரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

 

அதனைத்தொடர்ந்து முதலாவது அமர்வு வைபவரீதியாகவோ அல்லது வைபவரீதியற்றோ ஆரம்பிக்கப்பட்டு வந்துள்ளது.

 

1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆம் திகதி புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் சானாதிபதியின் சிம்மாசன உரைக்குப் பதிலாக அரசினது கொள்கைப் பிரகடன அறிக்கை இடம்பெறுகின்றது. தற்போதைய நடைமுறையின் படி இவை விவாதத்திற்கோ வாக்களிப்பிற்கோ எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .

2021 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்

09.02.2021

2021 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்

 

பாராளுமன்ற அமர்வுகளின் போது செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அரச ஊடக திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஊடக நிறுவனங்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அறியத்தர விரும்புகின்றேன்.

 

ஆகவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை உரியவாறு பூர்த்தி செய்து 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்பட்ட ஊடக அனுமதிப்பத்திரத்தையும் இணைத்து படைக்கலச் சேவிதர் திணைக்களத்திற்கு கையளிப்பதன் மூலம் 2021 ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

 

விண்ணப்பங்களை படைக்கலச் சேவிதர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் அல்லது கீழே பதிவிறக்கம் செய்யலாம்.

 

இவ்விடயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவையாயின் படைக்கலச் சேவிதர் திணைக்களத்தின் திரு.ஆர்.எம். ஜயதிலக அவர்களை 011 2777554 தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

 விண்ணப்பப் படிவம்

 

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom