Internal Affairs Unit
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Phone: 0112777229
WhatsApp No: 0777270145
Fax: 0112777508
Key Objectives of the Internal Affairs Unit (IAU)
i. Prevent corruption in the institution and cultivate a culture of integrity.
ii. Ensure transparency and accountability in all activities of the institution and ensure public access to information regarding institutional practices and decisions.
iii. Promote ethical governance within the institution.
iv. Develop a secure and accessible system to encourage reporting misconduct, protect whistle-blowers and maintain confidentiality.
v. Support legal enforcement through collaboration with law enforcement agencies and the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC).
Composition of Internal Affairs Unit
| Serial No. | Positions of Internal Affairs Unit | Name of the Officer and Designation |
| 01. | Head of the Unit | Mr. Chaminda Kularathne Chief of Staff and Deputy Secretary-General of Parliament |
| 02. | Integrity Officer | Mr. W.K.D.C. Withana Chief Internal Auditor |
| 03. | Members | Mr. Kushan Jayaratne Serjeant-at-arms |
| 04. | Mrs. C.I. Dissanayake Director(Administration) |
|
| 05. | Mrs. C.N. Lokukodikara de Silva Editor of Hansard |
|
| 06. | Mr. R. H. Edirisinghe Director (Catering & House-Keeping) |
|
| 07. | Mr. D.L.D. Adikari Co-ordinating Engineer |
|
| 08. | Mr. G.Sarath Kumara Director (Finance) |
|
| 09. | Mr. M. Jayalath Perera Director (Legislative Services) and Acting Director (Communication) |
|
| 10. | Mr. Buddhika Nawagamauwa Director(Information Systems & Management) |
பாராளுமன்ற அறிவகம்
"பாராளுமன்ற அறிவகம்" நிகழ்ச்சித்திட்டத்திற்கான அழைப்பு.....
இலங்கைப் பாராளுமன்றம் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் ஒரு நிறுவன கட்டமைப்பாகும். பாராளுமன்ற முறைமைகள் அதன் பாரம்பரியம் மற்றும் பிரசைகளின் பொறுப்புக்கள் தொடர்பில் உங்களுடன் நாம் பலமுறை கலந்துரையாடியுள்ளோம்.
"பாராளுமன்ற அறிவகம்" நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பின்வரும் தலைப்புக்களில் உங்களை நாம் தெளிவுப்படுத்த முயற்சிக்கின்றோம்.
- சனநாயகம் மற்றும் பாராளுமன்றம்
- சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி
- மக்கள் இறையாண்மை
- இலங்கைப் பாராளுமன்றத்தின் வகிபங்கு
- பாராளுமன்ற நடைமுறைகள்
- பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள்
- குழுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்
- சனநாயகம் மற்றும் ஊடக அறிக்கையிடல்
- பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம்
- சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்
- பாராளுமன்ற உறுப்பினரின் வகிபங்கு
- பாராளுமன்றம் மற்றும் பிரசைகளின் பங்களிப்பு
இலங்கைப் பாராளுமன்றத்தில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் உதவியுடன், மேற்கூறிய தலைப்புகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில தலைப்புகளில் உங்களது கிராமம், நிறுவனம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு "பாராளுமன்றத்தின் அறிவகம்" நிகழ்ச்சித்திட்டம் தயாராக உள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சித்திட்டங்களை உங்களது நிறுவனம்/ அமைப்பு/ குழு ஆகியவற்றுக்கு மேற்கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் படிவத்தை பூர்த்திசெய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது எமது அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்வதன் மூலமோ மேற்கொள்ள முடியும். நீங்கள் எங்களுக்கு அனுப்பும் தகவலின் அடிப்படையில் எமது அதிகாரிகள் நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்படும் திகதி மற்றும் நேரத்தை உங்களுக்கு வழங்குவார்கள்.
தகவல் படிவம்
பெயர்:
தேசிய அடையாள அட்டை இலக்கம்:
நிறுவனம் /அமைப்பின் பெயர்:
பங்கேற்கும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை:
நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள்:
தகவல் படிவத்தை சமர்ப்பிக்கவும்
தொடர்புகளுக்கு, தொடர்பாடல் திணைக்களம், இலங்கை பாராளுமன்றம்.
மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைபேசி இலக்கங்கள்: 0112777318 (பொது சேவைகள் பிரிவு)
0715352672
0779899085
2021 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்
09.02.2021
2021 ஆம் ஆண்டிற்காக பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக அனுமதிப்பதிரத்தை வழங்குதல்
பாராளுமன்ற அமர்வுகளின் போது செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அரச ஊடக திணைக்களத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஊடக நிறுவனங்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அறியத்தர விரும்புகின்றேன்.
ஆகவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை உரியவாறு பூர்த்தி செய்து 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்பட்ட ஊடக அனுமதிப்பத்திரத்தையும் இணைத்து படைக்கலச் சேவிதர் திணைக்களத்திற்கு கையளிப்பதன் மூலம் 2021 ஆண்டிற்கான பாராளுமன்ற ஊடகவியலாளர் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை படைக்கலச் சேவிதர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் அல்லது கீழே பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவையாயின் படைக்கலச் சேவிதர் திணைக்களத்தின் திரு.ஆர்.எம். ஜயதிலக அவர்களை 011 2777554 தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அரசியலமைப்பு திருத்திற்கான முன்மொழிவுகள்
![]() |
ஐக்கிய மக்கள் சக்தியினால் 2022.04.21 அன்று கையளிக்கப்பட்ட முன்மொழிவுகள் |
![]() |
சுயாதீன உறுப்பினர்கள் குழுவினால் 2022.04.21 அன்று கையளிக்கப்பட்ட முன்மொழிவுகள் |
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (1945 ஒக்டோபர் 10 ஆம் திகதி பிறந்தார்) இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் 11 ஆவது சபாநாயகராக தற்போது சேவையாற்றுகிறார். தனது ஆரம்பக் கல்வியை மாகந்துர மகா வித்தியாலயத்திலும், இரண்டாம் நிலைக் கல்வியை மத்திய கல்லூரி தெலிஜ்ஜவில மற்றும் மாத்தறை ராகுல கல்லூரி ஆகியவற்றில் பூர்த்தி செய்த திரு. அபேவர்தன 1965 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டு 1968 ஆம் ஆண்டில் கலை இளமானிப் பட்டதாரியானார்.
அதன் பின்னர், திரு. அபேவர்தன இலங்கை அரசாங்கத்தின் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்ததுடன் (1969-1971) சிறு கைத்தொழில் திணைக்களத்தில் அரசாங்க பட்டதாரி பயிலுனராகவும் (1971-1975), அரசாங்க கைப்பணிகள் விற்பனை நிலையம் - லக்சலவில் முகாமைத்துவ உதவியாளராகவும் (1975-1976) நெசவு வழங்கல் கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ உதவியாளராகவும் (1976-1977) சேவையாற்றினார். அதன் பின்னர், 1977 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் 1988 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இலங்கை பாற்பண்ணை அபிவிருத்தி மன்றத்தின் தலைவராகவும் அவர் சேவையாற்றினார்.
திரு. அபேவர்தன பகிரங்க சேவையில் அவரது வெற்றிகரமான சேவையின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் மத்திய குழு உறுப்பினராக (1974-1977) இணைந்ததுடன் இலங்கை தேசிய முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் தலைவராகவும் (1974-1976) தெரிவுசெய்யப்பட்டார்.
திரு. அபேவர்தன 1983 ஆம் ஆண்டில் இலங்கை தென்மாகாணத்தின் ஹக்மன தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கணிசமான பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது தமது அரசியலில் தடம்பதித்தார். பின்னர் சர்ச்சைக்குரிய இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்துக்கு (1987) எதிராக அவர் வாக்களித்ததைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு பதவி விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார்.
பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்த பின்னர், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் அவர் இணைந்தார். அதன் பின்னர், திரு. அபேவர்தன 1993 ஆம் ஆண்டில் தென் மாகாண சபையின் தலைவரானதுடன் அதே வருடம் தென் மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகவும் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டில் தென்மாகாண முதலமைச்சர் நியமனம் அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததுடன் 1999 ஆம் ஆண்டுவரை அப்பதவியில் சேவையாற்றினார். அதைத்தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட அவர் பாராளுமன்றத்திலிருந்து மீண்டும் பதவி விலகி தென்மாகாண சபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் சேவையாற்றினார்.
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதைத் தொடர்ந்து திரு. அபேவர்தன பாராளுமன்றத்துக்குத் தெரிவானதுடன் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். 2004 ஆம் ஆண்டில், அவர் சுகாதார மற்றும் போசாக்கு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். 2005 ஆம் ஆண்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் சேவையாற்றினார். 2010 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, திரு. அபேவர்தன 2015 ஆம் ஆண்டு வரை கமத்தொழில் அமைச்சராக சேவையாற்றினார். அதன் பின்னர், பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டிலேயே அப்பதவியிலிருந்து விலகினார். அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானதுடன் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். இக்காலப்பகுதியில், 2018 ஆம் ஆண்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சராகவும் 2020 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் சேவையாற்றினார்.
2020 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட திரு. அபேவர்தன 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி 9 ஆவது பாராளுமன்றத்தின் 11 ஆவது சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டு இற்றைவரை அப்பதவியில் சேவையாற்றி வருகின்றார். திரு. அபேவர்தன திருமணமானவர் என்பதுடன் ஐந்து பிள்ளைகளின் தந்தையுமாவார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்





விண்ணப்பப் படிவம்
