சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஜோர்ஜியாவின் சபாநாயகரைச் சந்தித்தார் |
திகதி : | 2023-11-01 |
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோர்ஜியா நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ ஷல்வா பபுவாஷ்விலி அகியோருக்கிடையிலான சுமுகமான சந்திப்பு இடம்பெற்றது.
அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரண்டு சபாநாயகர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ மாயாதுன்ன சிந்தக்க அமல், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










