பத்தரமுள்ள எம்.டி.எச். ஜயவர்தன மகாவித்தியாலயத்தின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகத்தின் தலைமையில் |
திகதி : | 2023-10-30 |
பத்தரமுள்ள எம்.டி.எச். ஜயவர்தன மகாவித்தியாலயத்தின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தலைமையில் நேற்று (ஒக். 26) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
எம்.டி.எச். ஜயவர்தன மகாவித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக மாணவர் பாராளுமன்றம் கூடி மாணவர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடிந்தமை மகிழ்ச்சியானது என கல்லூரியின் அதிபர் விஜிதா லக்ஷ்மி லியனகே இங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
இதன்போது, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் 'பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்க செயன்முறை' எனும் தலைப்பில் பிரதான உரை நிகழ்த்தப்பட்டது. மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு பாராளுமன்ற முறைமை மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய அறிவு பிரயோகரீதியான அனுபவங்களுடன் மிகவும் இலகுவாக முன்வைக்கப்பட்டது.
அதனையடுத்து இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வில் மாணவன் சாலித குமேஷ் சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டதுடன், பிரதமர் தலைமையிலான அமைச்சர்களின் சிறு உரைகளை அடுத்து அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர், பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் மாணவர் பாராளுமன்ற புதிய உறுப்பினர்களுக்கு சின்னங்களைச் சூட்டியதுடன் சான்றிதழ்களையும் வழங்கினார். அத்துடன், பாராளுமன்றத்தினால் கல்லூரியின் நூலகத்துக்குப் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளிக்கள பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில் பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாதியல்தெனிய, ஸ்ரீ ஜயவர்தனபுர வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எச்.டப்.என்.கே. ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











