இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

திகதி : 2023-10-20

பாராளுமன்ற உறுப்பினர்களாகிய கௌரவ பழனி திகாம்பரம் மற்றும் கௌரவ எம். ராமேஷ்வரன் ஆகியோர் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பாண்மையை இழந்துள்ளதால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களிற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 111(13) மற்றும் 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய கௌரவ ஜயரத்ன ஹேரத் மற்றும்  கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 20) அறிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்குக் குழு நியமனம்

இன்று (20) பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ டயனா கமகே, கௌரவ ரோஹன பண்டார மற்றும் கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றதாக, தனக்கு இரண்டு தரப்பினரிடமிடருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையொன்றை விரைவாக சமர்பிப்பதற்காக, பிரதி சபாநாயகரின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

அதற்கமைய, குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் உறுப்பினர்களாக கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன, கௌரவ கயந்த கருணாதிலக்க மற்றும் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom