கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்களுக்கு பாராளுமன்றத்தில் செயலமர்வு |
திகதி : | 2023-10-20 |
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்களிலுள்ள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கான பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் இடம்பெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலகத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பணியாளர்களால் பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு விரைவாக தகவல்களை வழங்கும் போது சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள் மற்றும் பாராளுமன்ற முறைமை தொடர்பான விரிவான புரிதல் இருப்பதும் முக்கியமானது. இந்த செயலர்வின் மூலம், பாராளுமன்றத்தில் சபை நடவடிக்கைகள் இடம்பெறும் விதம், நிலையியற் கட்டளைகள், ஹன்சாட் அறிக்கை, பாராளுமன்றத்தின் ஆய்வுப் பிரிவு, பாராளுமன்றம் பற்றிய தகவல்களைப் பெறும் வழிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்தச் செயலமர்வில் பாராளுமன்ற சுற்றுப்பயணமும் இடம்பெற்றதுடன், அதன் மூலம் பாராளுமன்றத்தின் தனித்துவமான இடங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









