இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஐந்து சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

திகதி : 2023-10-17

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்டமூலங்களில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அதற்கமைய, குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்), தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்), இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு, இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தம்) மற்றும் குடியியல் வான்செலவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு சட்டம், 2023 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தம்) சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க குடியியல் வான்செலவு (திருத்தம்) சட்டம் ஆகிய சட்டங்கள் இன்று (ஒக். 17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom