இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற முறைமையுடன் பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான திறந்த பாராளுமன்ற செயலமர்வு கேகாலையில்

திகதி : 2023-10-03

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமையுடன் பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான திறந்த பாராளுமன்ற செயலமர்வு மூன்று நாட்களாக கேகாலையில் இடம்பெற்றது.

ஜனநாயக எண்ணக்கரு, பாரளுமன்றத்தின் வகிபங்கு, பணிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் தொடர்பில் திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவின் ஊடாக பல்வேறு சமூகத்தினருக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதிநிதித்துவ ஜனநாயகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலைபேறான நம்பிக்கை மற்றும் உந்துதலை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த செயலமர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களிலும் இடம்பெற்றதுடன், 26 ஆம் திகதி இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

27 ஆம் திகதி வர்த்தக சமூகத்தினர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கேகாலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இதன்போது இலங்கை பாராளுமன்றத்தின் திறந்த வகிபங்கு, சட்டங்களை நிறைவேற்றுதல், குழு முறைமை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

28 ஆம் திகதி கேகாலை மாவட்டத்தின் மாணவர் பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ - மாணவிகளை அடிப்படையாக் கொண்டு செயலமர்வு இடம்பெற்றது. செயலமர்வு இடம்பெற்ற மூன்று நாட்களும் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க இணைந்துகொண்டதுடன், வருகை தந்த தரப்பினருடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

9 10

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom