பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சி ஒக்டோபர் 4 இல் - பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு |
திகதி : | 2023-10-03 |
திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கரையோர மக்களினதும் பாடசாலை மாணவர்களினதும் தயார்நிலையை பரிசோதிப்பதற்காக பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சியொன்று 2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (ஒக். 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரையான சுனாமி ஆரம்ப ஆபத்து நிலையை எதிர்வுகூறும் பொறிமுறையை மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி இடம்பெறுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், கரையோர மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் கோரிக்கையொன்று விடு்க்கப்பட்டு்ள்ளதாகவும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






