இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2023.09.19

திகதி : 2023-09-19

  • வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணி நேரம் திட்டவட்டமானது

 

வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணி நேரத்தை கடந்து ஒவ்வொரு நாளும் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதால் பொது அலுவல்களுக்கு ஏற்படும் தடைகள் மற்றும் அதன் மூலம் விவாதத்துக்கான காலம் குறைவது தொடர்பில் 2023.09.01 மற்றும் 2023.09.08 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை திட்டவட்டமாக மு.ப. 10.30க்கு நிறைவு செய்வதற்கும், அதுவரையான நேரத்தில் கேட்க முடியாத வினாக்கள் இருந்தால், அவற்றை அடுத்து பட்டியலிடக்கூடிய அண்மித்த தினமொன்றில் கேட்பதற்கு இயலுமான வகையில் மீண்டும் ஒழுங்குப்பத்திரத்தில் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் சபாநாயர் அறிவித்தார்.

அத்துடன், வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், வேறேதும் விசேட விடயமொன்று தொடர்பில் குறிப்பிடுவதற்கு ஏதாவதொரு உறுப்பினர் கருதினால், நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்படுமாறும், அது தொடர்பில் தேவைக்கமைய தனது முன்னனுமதியை பெற்றுக்கொள்ளுமாறும் சபாநாயகர் அறிவித்தார்.

“சேர்பெறுமதி வரி (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பில் மனு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்

“சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தின் பரிசீலனை செய்வதற்கு

“சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு  மேலதிக உறுப்பினர்களை நியமித்துள்ளதாக சபாநாயர் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ றோஹண திஸாநாயக்க, கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார, கௌரவ நிபுண ரணவக, கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ மற்றும் கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர் அந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

“ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தின் பரிசீலனை செய்வதற்கு

“ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்களை சபாநாயகர் நியமித்துள்ளார்.

அதற்கமைய, கௌரவ விதுர விக்ரமநாயக, கௌரவ விஜித பேருகொட, கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்க, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

"உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்" தொடர்பில் இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி

"உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்" தொடர்பில் இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் 2023 செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை பி.ப. 2.30 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை இல. 01 இல் இடம்பெறவுள்ளதாக அறிவித்த சபாநாயகர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom