இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொது வெளியில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தெளிவூட்டல்

திகதி : 2023-09-14

பொது வெளியில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட நிகழ்ச்சி ஒன்று அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பீடம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் பாராளுமன்றத்தின் குழு செயன்முறைகள் குறித்து உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) நிஷாந்தி விக்கிரமரத்ன மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) டி. டி. யு. கே. முனசிங்க விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரவேசம் என்ற தலைப்பில் பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு முகாமையாளர் புத்தினி ராமநாயக்க கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து மாணவர்கள் கேள்விகளைக் கேட்கும் அமர்வு பாராளுமன்ற நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி தலைமையில் நடைபெற்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தினால் தொகுக்கப்பட்ட பெறுமதிமிக்க புத்தகங்களின் தொகுப்பு பல்கலைக்கழக நூலகங்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், ரஜரட்ட பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் இ. எம். எஸ். ஏகநாயக்க உட்பட கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மாணவர்கள் தமது கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துகொண்டனர்.

இந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்ட பல்கலைக்கழ மாணவர்களுக்குத் தொடர்பாடல் திணைக்களத்தினால் பாராளுமன்ற சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

1 3

7 14

4 5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom