இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உயிர்த்தஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில்

திகதி : 2023-09-08

  • பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடும்

 

உயிர்த்தஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செப். 08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளதுடன், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்பு துறைமுக நரகப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2334/47ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை (451ஆம் அத்தியாயமான) காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2346/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்தஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான முழுநாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom