இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

திகதி : 2023-09-08

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (செப். 07) நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலங்கள் நேற்றும் (07) நேற்றுமுன்தினமும் (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இதற்கமைய  2023ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 15ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமாகவும் இச்சட்டங்கள் இன்று முதல் (08) நடைமுறைக்கு வருகின்றன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom