இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜப்பான் NPO UNSDG மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்

திகதி : 2023-08-22

ஜப்பான் NPO UNSDG மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்கள் குழுவொன்று சாபாநயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (ஆக. 18) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர்,  ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாகப் பல்வேறு துறைகளில் குறிப்பாக பௌத்த, கலாசார மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் ஜப்பானின் நட்புறவைப் பாராட்டுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்த மாணவர்கள் கௌரவ சபாநாயகரிடம் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றதுடன், பாராளுமன்றத்தின் கண்காணிப்பு பயணத்தில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

 

1

6 4

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom