நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி |
திகதி : | 2022-09-08 |
நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சரினால் பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுளுக்குப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய கே.எச்.ஜெசி முலர் மற்றும் கே. துனுசிங்க ஆகியோரை நியமிப்பதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
அதேநேரம், தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஏ.எம்.நஹியாவை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை கௌரவ ஜனாதிபதிக்கு மேற்கொள்வதற்கும் பாராளுமன்றப் பேரவை தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றப் பேரவை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றுக் (07) கூடியபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







