இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

திகதி : 2022-09-07

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (07) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்திருந்ததுடன், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

 

3 1

2 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom