இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஓமான் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

திகதி : 2022-07-05

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik  Alshehhi) நேற்று (04) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஓமன் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், இலங்கை - ஓமன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஓமானியத் தூதுவரின் 8 வருட சேவைக்காலத்தில் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

 

2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom