கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2022-06-21 |
- குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதமின்றி நிறைவேற்றம்
கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் இன்று (21) நிறைவேற்றப்பட்டது.
சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் கீழ் அனைத்து குற்றவியல் அல்லது சிவில் வழக்குகளை விசாரணை செய்தல், தீர்ப்பளித்தல் மற்றும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொழில் நியாய சபைகளின் தலைவர்களை மேலதிக நீதவான்களாக கருதுவதற்கும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுகின்றது.
தற்போது, கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்படி, ஒரு ஊழியர் தனது தொழிலை இடைநிறுத்தும் சந்தர்ப்பங்களில், அந்த செயன்முறையை நிறைவுறுத்துவதற்கு மாத்திரமே தொழிலாளர் நியாயசபையின் கீழ் வழக்குத் தொடரப்படுகிறது. ஆனாலும், பணிபுரியும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி, கொடுப்பனவு மற்றும் தொழில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான பல்வேறு சட்டங்களின் விதிகளை முதலாளிமார் ஏற்காத அல்லது மீறும் சந்தர்ப்பங்களில், நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் செயற்படும் சுமார் 80 நீதவான் நீதிமன்றங்களில் 16,000 இற்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்ட்டுள்ளமையே இங்கு எழும் பிரதான பிரச்சினையாகும். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்க நீண்ட காலம் எடுப்பதோடு தற்போது மிகக் குறைவான வழக்குகளே நீதவான் நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்படுவதாலும் இந்த வழக்குகள் நாடளாவிய ரீதியில் செயற்படும் 37 தொழில் நியாய சபைகளுக்கு அனுப்பப்பட்டால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை துரிதப்படுத்த முடியும் என கடந்த காலங்களில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனவே, இந்தச் சட்டம் தொழிலாளர் நியாயசபை தலைவர்களுக்கு வழக்கை நடாத்திச் செல்வதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. கடந்த காலங்களிலும் தொழிலாளர் நியாயசபைகளுக்கு குறித்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் பல வழக்குகளை துரிதமாக நிறைவுசெய்து வைக்க முடிந்தது எனவும், ஆனால் பின்னர் அந்த அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த சட்டமூலம் தொடர்பில் கருத்தில் கொள்ளப்பட்ட போது கலந்துரையாடப்பட்டது.
இந்த சட்டமூலத்தை கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்ய முடியும்
http://documents.gov.lk/files/bill/2022/4/191-2022_T.pdf
மு.ப. 11.00 முதல் மு.ப. 11.30 வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தினால் 1979 ஆம் ஆண்டு 15 இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தில் 442 ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன் வழக்கு ஒன்றின் ஒவ்வோர் தரப்பினருக்கும் தீர்ப்பின் அல்லது வழக்கு அறிக்கையின் கட்டளையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றை கட்டணமின்றி வழங்குதல் இடம்பெறும்.
இந்த சட்டமூலத்தை கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்ய முடியும்
http://documents.gov.lk/files/bill/2022/3/182-2022_T.pdf
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தினால் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்துக்கு 154(அ) எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுவதுடன் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் விதிமுறைப்பட்ட எண்பிப்பிலிருந்து குறித்த சில ஆவணங்களை விலக்களிப்பதும் இடம்பெறுகின்றது.
இந்த சட்டமூலத்தை கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்ய முடியும்
http://documents.gov.lk/files/bill/2022/3/187-2022_T.pdf
பாராளுமன்றம் இன்று மு.ப. 10.00 மணிக்கு கூடியதுடன் அரசியலமைப்பின் 121(1) யாப்புக்கு அமைய உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உற்படுத்தப்பட்ட "அரசியலமைப்புக்கான இருபத்து ஓராவது திருத்தம்" எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென்பதை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதேபோன்று, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் (முதலாம் மதிப்பீடு) பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தினால் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டம் திருத்தப்படுவதுடன் மரண தண்டனையினால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்கு குறைந்த நபரொருவர் தொடர்பில் நீதிமன்றத்தினால் தண்டனைச் சட்டக் கோவையின் 53 ஆம் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறான தண்டனைத் தீர்ப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது இடம்பெறுகின்றது.
இந்த சட்டமூலத்தை கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்ய முடியும்
https://www.parliament.lk/uploads/bills/gbills/gazette/tamil/6255.pdf
அதனையடுத்து நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமை தொடர்பில் திட்டவட்டமான வழிகாட்டலை முன்வைக்கும் வரை எதிர்கட்சியினால் இந்த வார பாராளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினர்.
இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு மு.ப. 11.30 முதல் பி.ப. 4.30 வரை கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
அதனையடுத்து, பி.ப. 4.30 முதல் பி.ப. 4.50 வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க அவர்கள் புகையிரதம் உள்ளிட்ட போக்குவரத்து முறையை அபிவிருத்தி செய்வதன் அவசியம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் வினவினார்.
அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களால் கொண்டுவரப்பட்ட 'நெருக்கடியான நிலைமையில் மாணவர்களின் கல்விக்கான தடைகளை நீக்குவதற்கு அனைத்து உறுப்பினர்களும் பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும்' எனும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய பி.ப. 5.00 மணி வரை விவாதம் இடம்பெற்றது. அதன்பின்னர் நாளை (22) மு.ப. 10.00 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






