இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதற்கான ஆரம்ப சர்வதேச தினத்தை கொண்டாடும் வகையில்

திகதி : 2022-06-18

இன்று, ஜூன் 18, 2022 அன்று, வெறுப்புப் பேச்சை எதிர்ப்பதற்கான ஆரம்ப சர்வதேச தினத்தைக் கொண்டாடுகின்றோம். உலகளாவிய எழுச்சி மற்றும் வெறுப்பு பேச்சு மீதான அக்கறையை அங்கீகரித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐ.நா. பொதுச் சபை “மதங்களுக்கிடையேயான மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துதல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதில் சகிப்புத்தன்மை” என்ற தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானமானது ஜூன் 18 ஐ வெறுப்பு பேச்சுக்களை எதிர்ப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது.

“முதன் முறையாக, பாகுபாடு, இனவெறி மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவற்றை எதிர்ப்பதற்கான உலகளாவிய முன்முயற்சியில் ஒரு மைல்கல்லை இந்த நாள் குறிக்கின்றது, இந்த நாளைக் கொண்டாடும் போது, மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் அமைதிக்கான மரியாதையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வெறுப்பு பேச்சுகளின் முன்னோடியில்லாத பெருக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான நமது முயற்சிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்” என்றார் கௌரவ. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே.

குறிப்பிடத்தக்க வகையில், வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதற்கான தேவையும் பொறுப்பும் அரசிடம் மட்டுமல்ல, தனியார் துறை, ஊடகங்கள் மற்றும் இணைய நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூகத்தின் அங்கத்தவர்கள் அல்லது தனிநபர்கள் உட்பட பல உறுப்பினர்கள் மீதும் உள்ளது. இது குறிப்பாக, சமூக வலைத்தளங்களின் எழுச்சியின் பின்னணியில், இணையத்தளத்திற்கான அணுகல் உள்ள எவருக்கும் குரல் எழுப்புவதற்கான தளத்தை அவை வழங்குவதனால், ஒவ்வொரு மனிதனுக்கும் வெறுப்புப் பேச்சு தொடர்பான விழிப்புணர்வுடனும் மற்றும் அவற்றை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தவும் வேண்டிய தார்மீக கடமை உள்ளது. எனவே, இது ஒரு சுருக்கமான முன்முயற்சி அல்ல, ஆனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பொருத்தமானது, ஏனெனில் எவரும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு இலக்காகலாம், குறிப்பாக இன்றைய இணையத்தள இயக்க உலகில். 2021 இல் ஐ.நா பொதுச்செயலாளர் திரு. அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களால் மிகவும் எளிமையாக வெளிப்படுத்தப்பட்டது போல், “வெறுப்புப் பேச்சு என்பது அனைவருக்கும் ஆபத்தானது - எனவே அதை எதிர்த்துப் போராடுவது அனைவருக்கும் ஒரு கடமையாக இருக்க வேண்டும்.”

பெண்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு இந்த நாள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் வெறுப்பூட்டும் பேச்சுக்கு இலக்காகின்றார்கள். இது தொடர்பில், கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு ஆண் ஆதிக்கம் மிக்க ஒரு துறையில் ஈடுபட்டுள்ள பெண் அரசியல்வாதிகள் என்ற வகையில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது அத்துடன் வெறுப்புப் பேச்சை எதிர்ப்பதற்கான உலகளாவிய முயற்சியில் எமது வகிபங்கின் உடனடித் தேவை மற்றும் பொறுப்புணர்வை நாம் உணர்கின்றோம்.” எனக் குறிப்பிட்டார்.

“கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின்” மீது வெறுப்புப் பேச்சுகளை எதிர்க்கும் நடவடிக்கைகளின் தாக்கத்தைச் சுற்றி ஒரு பேச்சு உள்ளது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியமானதாகும். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமை ஆகும் மற்றும் இது ஈடுபாட்டிற்கான சுதந்திரம், ஒரு மதத்தை கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் போன்ற பிற மனித உரிமைகளை ஆதரிக்கும் எந்தவொரு ஜனநாயகத்தினதும் அடிப்படையாகும். “உங்களுக்கு என்ன தேவைப்படுகின்றது, எந்த வகையிலும் எந்த விதமான விளைவுகளையும் சந்திக்காமல் நீங்கள் அவற்றை விரும்பும் விதத்தில் பெற்றுக் கொள்வதற்கான சலுகைகள் வழங்கப்படுகின்ற ஒரு பணியிடத்தில் இருந்து வருகின்ற எனக்கு, பேச்சுச் சுதந்திரமானது ஒருபோதும் சுயநலத்திற்காகவும் மற்றும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்று நம்பிக்கையுடன் கூறுவதில் எனக்கும் மற்றும் ஏனைய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும் நேரடி அனுபவம் உண்டு. ஆனால் அது உண்மையில், மிரட்டல் மூலம் வேறொரு கட்சியை எதிர்க்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுகின்றது.” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார். எனவே, வெறுப்புப் பேச்சுக்கு எதிரான நடவடிக்கைகள் பேச்சுச் சுதந்திரத்தை வளர்ப்பதற்கான முன்முயற்சிகளாக வரவேற்கப்பட வேண்டும், ஏனெனில் இது எந்த வகையிலும் சமூகத்தில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முழுமையான உரிமை அல்ல.

“நவம்பர் 2021 இல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களாக இருக்கும் ஆண்களால் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாகத் துன்புறுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாராளுமன்ற சபாநாயகருக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கடிதம் எழுதுவதற்கு நான் முயற்சி எடுத்தேன்”, என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே மேலும் கூறினார். நாட்டை ஆளுவதற்கான சட்டங்கள் வகுக்கப்படும் இடத்திலேயே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களை நோக்கி, அநாகரீகமான, முறையற்ற மற்றும் அத்துமீறும் கருத்துக்கள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

“வெறுப்பூட்டும் பேச்சை அடையாளங் காணவும், எதிர்கொள்ளவும் மற்றும் எதிர்ப்பதற்கான உத்திகளை வகுப்பதற்காகவும் இலங்கையில் கொள்கை உரையாடல் ஒன்றைத் தொடங்க நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். வெறுப்புப் பேச்சு மற்றும் அதன் தாக்கத்தை முதலில் புரிந்துகொள்வது, வெறுப்புணர்வை எதிர்ப்பதில் நமது பங்கை நிறைவேற்றுவதற்கான தொடக்கப் புள்ளியாகும், அதன் பின்னர் வெறுக்கத்தக்க பேச்சை அடையாளங் காணவும், அவற்றை எதிர்த்துப் போராடவும், எதிர்க்கவும் வழிமுறைகளை உருவாக்கவும் வேண்டும்”, என்று டாக்டர். பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

 

hate-speech

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom