மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிக்க பாராளுமன்றப் பேரவை இணக்கம் |
திகதி : | 2022-05-27 |
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்றப் பேரவை இணங்கியுள்ளது.
கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (26) நடைபெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்திலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், தரணி ஷிரந்தா விஜயதிலக, ஜயந்த எம். சுவாமிநாதன், ஏ.ஏ. மொஹமட் ஃபாத்திஹூ மற்றும் செல்லத்தம்பி சுமித்திரா ஆகியோரை இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்களாக மீண்டும் நியமிப்பதற்கும் பாராளுமன்றப் பேரவை இணங்கியுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






