பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி |
திகதி : | 2022-04-27 |
இலங்கையின் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வது எவ்வாறு என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிகழ்வொன்று இன்று (27) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பிரதான வளவாளராக கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே கலந்துகொண்டார். பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாய விசேட நிபுணராக இவர் 36 நாடுகளுடன் பணியாற்றி வருகிறார். மேலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











