இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி

திகதி : 2022-04-25

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்ற தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை இலக்கம் 01 இல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதனை பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே கலந்துகொள்ளவுள்ளார். இவர் தற்பொழுது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாய விசேட நிபுணராக 36 நாடுகளுடன் பணியாற்றி வருகிறார். மேலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த விசேட நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்புவிடுத்துள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom