அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசானாகக் பதவியில் கடமைகளை பொறுப்பேற்றார் |
திகதி : | 2022-04-19 |
சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியில் இன்று (19) காலை பாராளுமன்றத்தில் உள்ள ஆளும்கட்சியின் முதற்கோலாசான் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன்போது, அரசாங்க சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் சபை முதல்வருமான கௌரவ தினேஷ் குணவர்தன, கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன, ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ மிலான் ஜயதிலக்க, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற வரலாற்றுக்கு அமைய ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியை முதன்முறையாக வகித்தவர் கௌரவ ஆர்.எஸ்.என். குணவர்தன ஆவார். கௌரவ ஏ.ஈ. குணசிங்க, கௌரவ சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா, கௌரவ டபிள்யு.ஜே.சி. முனசிங்க, கௌரவ. ஜே.டி. வீரசேகர, கௌரவ எஸ்.கே.கே. சூரியாராச்சி, கௌரவ எம்.பி.டி.இஸட். சிறிவர்தன, கௌரவ ஜே.ஆர். ஜயவர்தன, கௌரவ கே.பி. ரத்நாயக்க, கௌரவ வின்சன்ட் பெரேரா, கௌரவ கலாநிதி விமல் விக்ரமசிங்க, கௌரவ ரிச்சட் பத்திரன, கௌரவ ரெஜி ரணதுங்க, கௌரவ மஹிந்த சமரசிங்க, கௌரவ ஜெயராஜ் பர்னாந்துபுல்லே, கௌரவ தினேஷ் குணவர்தன, கௌரவ கயந்த கருணாதிலக்க மற்றும் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து ஆகியோர் இதற்கு முன்னர் ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியை வகித்துள்ளனர்.
அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதற்கு முன்னர் இந்தப் பதவியை வகித்த கௌரவ ரெஜி ரணதுங்க அவர்களின் புதல்வராவார். அவர் ஆனந்தா கல்லூரியின் பழையமாணவர் என்பதுடன் இதற்கு முன்னர் மேல்மாகாண சபை முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் பேணி இந்தப் பதவியில் பணியாற்றுவதே தனது எதிர்பார்ப்பாகும் என கடமைகளைப் பொறுப்பேற்ற பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாத்து அரசாங்கத்தை முன்னெடுத்துச்செல்ல மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் சபை முதல்வர் பதவிக்கு நேற்று (18) முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









