இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மத்திய வங்கி அதிகாரிகளுக்குப் பாராளுமன்றத்திலிருந்து விசேட நிகழ்ச்சி

திகதி : 2022-04-05

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவுக்கு விசேட நிகழ்ச்சியொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஊடாக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு அவசியமான அரசாங்க நிதி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பிலும், உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக குழுக்கள் பற்றியும், சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா சட்டவாக்கம் மற்றும் சட்டமூலங்கள் தொடர்பிலும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர்.

இலங்கை பாராளுமன்றம் தொடர்பில் துல்லியமான அறிவையும், தகவல்களையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொடர்பாடல் திணைக்களம் ஆரம்பித்துள்ள இந்நிகழ்ச்சி இணையம் மூலமும், நேரடியாகவும் பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom