இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் சபாநாயகரை சந்தித்தார்

திகதி : 2022-04-06

தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் யுன் சியோல் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜியோங் வூஜின் அவர்களும் கலந்துகொண்டார்.

தென்கொரிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மற்றும் கலாசார மேம்பாட்டுக்கு தென்கொரிய அரசின் ஆதரவை தொடர்ந்தும்  வழங்குவதாக தென்கொரிய அரச கொள்கைகள் ஒருங்கிணைத்தல் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இலங்கை தற்பொழுது முகங்கொடுக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண தென்கொரியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவு அத்தியாவசியமானது என சபாநாயகர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் தென்கொரிய அரசியல் விவகார பிரதியமைச்சர் ரியூ டே யோங் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இலங்கை பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலகவும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom