ஹந்தஸ்ஸ அந் - நூர் ஆரம்ப வித்தியாலய மாணவர்களுக்கு பாராளுமன்றத்தினால் விசேட நிச்சித்திட்டம் |
திகதி : | 2022-03-31 |
பாராளுமன்ற முறைமைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் கண்டி ஹந்தஸ்ஸ அந் - நூர் ஆரம்ப வித்தியாலய மாணவ மாணவிகளுக்காக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அண்மையில் Zoom தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்றம் தொடர்பிலான அறிமுகத்தை உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.யு.எம் வாசிக் வழங்கியதுடன், மழலைப் பாராளுமன்றம் தொடர்பான கதையை பொது சேவைகள் அதிகாரி யஸ்ரி மொஹமட் வழங்கினார். பாராளுமன்றம் தொடர்பான படங்கள் மற்றும் விளங்கங்களை பொது சேவைகள் அதிகாரி பா.ருத்ரகுமார் வழங்கியதுடன், பாராளுமன்ற ஊடக அதிகாரி எம். நுஸ்கி முக்தார் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அந் - நூர் ஆரம்ப வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம். அனஸ் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவ மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும்.
பா.ருத்ரகுமார்- 0770055502
ஜெயபிரகாஷ்- 0715352672
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












