இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் இன்று பராளுமன்றத்தில் நிறைவேற்றம்

திகதி : 2022-03-11

  • தனிநபர் பிரேரணைகள் குறித்த விவாதம் மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 வரை நடைபெற்றது

காணி அபிவிருத்தித் (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்துக்கு அமைய காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், “காணி ஆணையாளர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக “காணி ஆணையாளர் தலைமையதிபதி’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மேலதிக காணி ஆணையாளர்கள், பிரதிக் காணி ஆணையாளர்கள், உதவிக் காணி ஆணையாளர்கள் மற்றும் வேறு அலுவலர்களை நியமிப்பதற்கும், பிரதேச செயலாளரின் அங்கீகாரமின்றி பற்றுநிலத்தை ஈடுவைப்பதற்குப் பற்றுநிலத்தின் சொந்தக்காரரை இயலச்செய்தல், அளவையிடப்படாத காணிக்கான அளிப்பொன்றை வழங்குவதனைத் தடை செய்தல் போன்ற திருத்தங்கள் சில இதில் அடங்குகின்றன.

சட்டமூலம் தொடர்பான தகவல்களை கீழ்வரும் இணைபில் பார்வையிடவும்

http://documents.gov.lk/files/bill/2022/1/168-2022_T.pdf

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடியதுடன், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக ஓய்வூதிய உரிமைக் காலம் நீடிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேள்வியெழுப்பினார். அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலியே ரத்தின தேரர் இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை நடப்பதாகக் கூறி கனடாவின் ஒன்டோரியா மாகாண பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் குறித்து கேள்வியெழுப்பினார்.

அதன் பின்னர் முற்பகல் 11.00 மணி பிற்பகல் 3.00 மணி வரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “60 வயதைத் தாண்டியவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்” தொடர்பான தனிநபர் பிரேரணையும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹன பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “உள்நாட்டு விதை உற்பத்திச் செயன்முறையினை உயிர்ப்பூட்டுதல்” தொடர்பான தனிநபர் பிரேரணையும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் முன்வைக்கப்பட்ட “இலங்கையில் உளவியல் ஆலோசகர்களை/உளவியல் சிகிச்சையாளர்களை ஒழுங்குறுத்தல்” குறித்த தனிநபர் பிரேரணையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் பிற்பகல் 3.00 மணிக்கு காணி அபிவிருத்தி (திருத்த) சட்டமூலம் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாலை 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டது. விவாதத்தைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் 22ஆம் திகதி காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom