'பாராளுமன்ற சார சங்ஹிதா' புலமை இலக்கிய நூல் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசானுக்கு கையளிப்பு |
திகதி : | 2022-03-02 |
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் 'பாராளுமன்ற சார சங்ஹிதா' புலமை இலக்கிய நூலின் இரண்டாம் பதிப்பு எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லகஷ்மன் கிரிஎல்ல ஆகியோருக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசானுக்கு இந்நூல் கையளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகாந்த சில்வா மற்றும் தொடர்பாடல் திணைக்கள ஊடக முகாமையாளர் நிம்மி ஹாதியல்தெனிய ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
கடந்த 08 ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











