பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (22) பாராளுமன்றத்தில் அனுமதி |
திகதி : | 2022-02-22 |
பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
இதற்கமைய 1979ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழ் 2021 ஏப்ரல் 08ஆம் திகதிய 2222/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்டு 2022.01.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்பட்டன.
விளைபொருட் தரகர் (தேயிலை) எனும் தொழிலைக் கொண்டு நடத்துவதற்கான உரிமம் ஒன்றுக்கு செலுத்தப்படற்பாலனவான உரிமக் கட்டணம் ஒரு மில்லியன் ரூபாவாகத் திருத்துதல் உள்ளிட்ட திருத்தங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
http://documents.gov.lk/files/egz/2021/4/2222-44_T.pdf
அத்துடன், இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழ் 2021 ஓகஸ்ட் 18ஆம் திகதிய 2222/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்டு 2022.01.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதி 2021 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறப்பர் (மீள்நடுகை) மானிய ஒழுங்குவிதிகள் என எடுத்தக்காட்டப்படுவதுடன், 2019ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்தது. இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறப்பர் மீள்நடுகைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள இறப்பர் தோட்டத்துக்கு அல்லது சிறுபற்று நிலத்தில் மீள்நடுகை செய்வதற்காக மானியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
http://documents.gov.lk/files/egz/2021/8/2241-36_T.pdf
மிகைக்கட்டண வரியினை விதிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செயற்படுவதற்குமான சட்டமூலம் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
http://documents.gov.lk/files/bill/2022/2/173-2022_T.pdf
இன்று பாராளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, கௌரவ சபாநாயகரினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.
முற்பகல் 10.00 – 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கேள்வியெழுப்பினார்.
பிற்பகல் 4.30 மணிவரை மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு அவை அங்கீகரிக்கப்பட்டன. இதன் பின்னர் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.மரிக்கார் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை ரம்புக்கண முதல் கலகெதர வரையான 20 கிலோ மீட்டர் தூரத்தை அமைப்பதற்கான செலவீனம் குறித்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்டன் பர்னாந்து அவர்களிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரிசெலுத்தும்போது மறுக்கப்படும் காசோலைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாளக பண்டார கோட்டேகொட கௌரவ நிதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுப பஸ்குவல் அவர்களால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் பிற்பகல் 5.30 மணிவரை இடம்பெற்றதுடன், பாராளுமன்றம் நாளை (23) முற்பகல் 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






