ஐந்து சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் |
திகதி : | 2022-02-18 |
பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 5 சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார்.
அதற்கமைய, கடந்த 09 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிலும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை இவ்வாறு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம், 2022 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டம், 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டம், 2022 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டம் ஆகிய சட்டங்கள் நேற்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







